“SAMMANTHURAI” எனும் அடையாளச் சின்னம் (Landmark)
சம்மாந்துறை பிரதேச சபை வளாகத்தின் முன்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்டமான “SAMMANTHURAI” எனும் அடையாளச் சின்னம் (Landmark) சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், கௌரவ உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் நேற்று சனிக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையில் உருவாக்கப்பட்டுள்ள இவ்வடையாளச் சின்னம், சம்மாந்துறையின் வரலாற்றுப் பெருமை, தனித்துவம் மற்றும் பிரதேசத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் நவீன கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இரவு நேரங்களில் ஒளிவெள்ளத்தில் மிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ்நினைவுச் சின்னம், பிரதேச சபை வளாகத்திற்கு வருகை தரும் பொதுமக்களை வெகுவாகக் கவரும் வகையில் அமைந்துள்ளதுடன், சம்மாந்துறை பிரதேச சபையின் அழகிய தோற்றத்தை மேம்படுத்துவதுடன், சம்மாந்துறை எனும் பெயரையும் தனித்துவமான அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அடையாளச் சின்னமாகவும் காணப்படுகின்றது.









0 Comments