பிரதேச சபையின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேச சபையின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களான ஏ.எல்.எம். ஜிப்ரி, எஸ்.எம்.எஸ். நிலூவ்பா, ஏ.எச்.எம்.காலித், ஏ.சீ.எம்.நயீம், எம்.சி.நௌஸா, ஏ.ஜய்னுல் றிபானா, வை.வீ.எம். நபாஸ், ஹாதிக் இப்றாகீம், ஏ.சதானந்தன், எஸ்.எல்.ஏ நஸார், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பஸ்மிலா, உத்தியோகத்தர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அல்-பத்தாஹ், ஷாறா, அல்-ஹுதா, நாவலர், மபாஸா,அஷ்ரப் ஆகிய ஆறு சனசமூக நிலையங்களின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் இயங்கும் பிஸ்மில்லாஹ் பாலர் பாடசாலை, MPCS பாலர் பாடசாலை, பாத்திமா பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் மற்றும் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டதுடன், மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.