சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் 20 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணி மற்றும் 18 வயதுக்குட்பட்ட பூப்பந்தாட்ட அணி ஆகியவை 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான 40ஆவது தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் மாணவர்களின் போக்குவரத்துச் செலவுகளுக்காக, ஊக்குவிக்கும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச சபையினால் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதற்கான காசோலை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஆர்.எம். உவைஸ் அவர்களிடம் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களான எஸ்.எல்.எம். பஹ்மி, ஹாதிக் இப்றாகீம், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களினால் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மாணவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.