சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் அவர்களுக்கும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு
சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களுக்கும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் நலனுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சம்மாந்துறை யூ.எல்.எம். முஹைதீன் பொது மைதானத்தின் பார்வையாளர் அரங்கின் தற்போதைய நிலைமையை அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அதன் எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா,
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் வீ. வினோகாந்தன், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான ஏ.எச்.எம்.காலித், ஏ.சீ.எம்.நயீம், எஸ்.டனோஜன், எஸ்.எல்.ஏ. நஸார், எம்.எல்.ஏ. கபூர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்.











0 Comments