உள்ளூராட்சி வார நிகழ்வு அங்குரார்ப்பணம்
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் “வளமான நாடு – அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் சம்மாந்துறை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நிஸ்ரின் , சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களான வை.வீ.எம்.நபாஸ், ஹாதிக் இப்றாஹிம், எஸ்.எல்.ஏ.நிஸார், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதமும் அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி கீதமும் இசைக்கப்பட்டன. மேலும், உள்ளூராட்சி வார நிகழ்வுகளின் நோக்கம் மற்றும் செயற்றிட்டங்கள் தொடர்பான அறிமுகவுரையும் இடம்பெற்றது.


.jpeg)









.jpeg)



.jpeg)

.jpeg)



.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)



.jpeg)
.jpeg)


0 Comments