“புத்துயிர்க்கும் புதிய நகரம்” உள்ளூராட்சி வாரம் 2026 நிகழ்வு
































































“புத்துயிர்க்கும் புதிய நகரம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் உள்ளூராட்சி வாரம் 2026 நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, மூன்றாம் நாளான சுற்றாடல் மற்றும் மரநடுகை தின நிகழ்வுகள் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன்போது, சம்மாந்துறை யூ.எல்.எம். முஹைதீன் பொது மைதானம் மற்றும் அன்வர் இஸ்மாயில் மாவத்தை ஆகிய பகுதிகளில் பயன்தரும் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. அத்துடன், பிரதேசத்தில் காணப்பட்ட மின்கழிவுகளும் சேகரிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ. வினோகாந்தன், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எச்.எம்.காலித், ஏ.சீ.எம்.நயீம், எஸ். டனோஜன், எஸ்.எல்.ஏ. நஸார், எம்.எல்.ஏ. கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.