"கிளீன் சிறிலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் - "அத்தம"
"கிளீன் சிறிலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணியாக முன்னெடுக்கப்பட்ட "அத்தம" தேசிய தூய்மைத் தினத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்கான பிரதான நிகழ்வு உடங்கா-01 கிராம சேவகர் பிரிவில் நேற்று சிறப்பாக இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியன இணைந்து 20 கிராமசேவைப் பிரிவுகளில் பல்வேறு சிரமதானப் பணிகள், கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சள ரத்னாயக்க, சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த பிரதீப் குமார, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நிஸ்ரின், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் வி. வாசித் அஹமட், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான வை.பி.எம்.நவாஸ், ஏ.எல்.எம்.ஜிப்ரி ஏ.எச்.எம்.காலித், எஸ்.டனோஜன், ஏ.சதாந்தம், முப்படை மற்றும் பொலிஸ் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




































0 Comments