தேசிய ரீதியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

தேசிய ரீதியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொலிஸ் நிலையம் மற்றும் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை ஆகியன இணைந்து வைத்தியசாலை தோட்டத்தை சுத்தம் செய்யும் பணிகள் இன்று (03.08.2026) திங்கட்கிழமை முன்னெடுத்தன.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ். றிஸ்கா, சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி உதவியாளராக திருமதி யூ. எஸ். எம். சதாத், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டனர்.