தேசிய ரீதியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
தேசிய ரீதியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து சம்மாந்துறை முகைதீன் மாவத்தை வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட கழிவுகள் மற்றும் பற்றைக்காடுகளை அகற்றி சுத்தம் செய்யும் நடவடிக்கையை இன்று (01.08.2026) சனிக்கிழமை முன்னெடுத்தன.
இதன்போது, சம்மாந்துறை பிரதேச சபையின் கனரக வாகனங்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வீதியோரங்களில் தேங்கியிருந்த கழிவுகள் மற்றும் நுளம்பு பெருகக்கூடிய பற்றைக்காடுகள் அகற்றப்பட்டு சுற்றுச்சூழல் சுத்தப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான எஸ்.எல்.எம்.பஹ்மி, ஏ.சி.எம்.நயீம், பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம். றம்சின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டனர்.


















0 Comments