"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) - "நேர்மை வாரம்"
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை "நேர்மை வாரம்" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் இன்று பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் நேர்மை சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கு நேர்மையான, ஊழலற்ற, பொறுப்புணர்வுமிக்க மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட அரச சேவையை வழங்குவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

























0 Comments