தேசிய ரீதியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

தேசிய ரீதியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொலிஸ் நிலையம் மற்றும் வலயக் கல்வி அலுவலகம் ஆகியன இணைந்து அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமும், கள விஜயத்தையும் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுத்தன.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக எச். நைரூஸ்கான், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்வேலைத்திட்டம் ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம், அல்-மதீனா வித்தியாலயம் மற்றும் அல்-அஸ்ஹர் வித்தியாலயம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.