அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடல்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடபாதை அபிவிருத்திப் பணிகள் தூரநோக்கு அற்ற வகையிலும், முறையற்ற விதத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
இது தொடர்பாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்நாயக்கவை நேரடியாக குறித்த இடத்திற்கு அழைத்துச் சென்று, அப்பணிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் குறித்து கௌரவ தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினரிடம் விளக்கமளித்துடன் சுட்டிக்காட்டினார்.











0 Comments