மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ், நெய்னாகாடு பிரதேசத்தில் செப்பனிடப்பட்ட வீதிகளை கௌரவ தவிசாளர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

அரசாங்கத்தின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ், நெய்னாகாடு பிரதேசத்திலுள்ள றகுமானியா வீதி, விரயடி அனைக்கட்டு வீதி (பட்டம்பிட்டி வீதி) மற்றும் அல்-பலாஹ் பள்ளிவாசல் வீதி ஆகியவை கொங்கிறீட் வீதிகளாக செப்பனிடப்பட்டுள்ளன.

இவ்வீதிகளை பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது, அப்பகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்.