மல்கம்பிட்டி பள்ளிவாசலைச் சுற்றி மின் விளக்குகள் பொருத்தும் பணிகள்
மல்கம்பிட்டி பள்ளிவாசல் மற்றும் கலந்தர் சிக்கந்தர் ஸியாரத்தின் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் நேற்று சனிக்கிழமை நேரில் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி நடைபெறவுள்ள கொடியேற்ற நிகழ்வை முன்னிட்டு பள்ளிவாசலைச் சுற்றி மின் விளக்குகள் பொருத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.








0 Comments