சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்த விசேட கலந்துரையாடல்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்த விசேட கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி நிஸ்ரின் சியாத், சம்மாந்துறை பிரதேச சபைச் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பஸ்லான் நளீம், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோர்களின் பங்குபற்றலுடன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

​இக்கலந்துரையாடலில் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பிரதேச அபிவிருத்தி சார்ந்த பின்வரும் முக்கிய தலைப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
📚 தனியார் கல்வி நிலையங்களின் சுகாதாரம்
🚭 புகைத்தல் இல்லாத வலயம் (No Smoking Zone) மற்றும் அதற்கான நடவடிக்கைள்.
📜 வியாபார உத்தரவுப் பத்திரம் மற்றும் சுற்றாடல் உரிமங்களை (Environmental Protection License) முறைப்படுத்துதல்.
🥩 மாடு அறுக்கும் மடுவம், இறைச்சிக் கடையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்.
🍏 உணவுப் பாதுகாப்பு வழிகாட்டல் குழு (Food Safety Steering Committee) வொன்றை உருவாக்குதல்.
​பிரதேச மக்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கும், தூய்மையான சூழலுக்கும் அடித்தளமிடும் பல ஆரோக்கியமான முடிவுகள் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்டன. மக்களின் நலம் காக்க என்றும் அர்ப்பணிப்புடன்!