சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கிடையிலான சந்திப்பு

உள்ளுராட்சி சேவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜூனைடீன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை உபவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில், மக்களுக்கு வழங்கப்படும் உள்ளுராட்சி சேவைகளை நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக மேலும் வினைத்திறனுடனும் எளிமையுடனும் வழங்குவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.