சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ பதில் தவிசாளர் வீ. வினோகாந்த் - மின்மினி மின்ஹா சந்திப்பு

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “லஞ்சீட்” (பிளாஸ்டிக் லென்ஷீட்) பயன்பாட்டை முற்றாகத் தடை செய்ய வேண்டுமென, மின்மினி கல்வி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக சேவை (மீட்சி) அமைப்பின் ஸ்தாபகரும், ஆசியாவின் இளம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வாளரும் சர்வதேச விருதாளருமான மின்மினி மின்ஹா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்கோரிக்கையை சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ பதில் தவிசாளர் வீ. வினோகாந்த் அவர்களை இன்று (புதன்கிழமை) அலுவலகத்தில் நேரில் சந்தித்து, எழுத்து மூலம் கோரிக்கை கடிதத்தை வழங்கினார்.
இதன் போது, அமைப்பின் பிரதித் தலைவர் ஐ. ஜனுன், செயலாளர் ஏ. எல். நஜுவா, பொருளாளர் எம். ஏ. செய்ணம்பு மற்றும் மீட்சி அமைப்பின் நிர்வாக செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.