புதிய வளத்தாப்பிட்டியில் இயங்கி வரும் இரும்பு கடையை சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ பதில் தவிசாளர் வீ. வினோகாந்த் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். அக்கடையின் செயற்பாடுகள் நீண்ட காலமாக வீதியில் செல்பவர்களுக்கு சிறு அளவில் அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்தமை கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, கடை உரிமையாளரை நேரடியாக சந்தித்து நிலைமையை தெளிவுபடுத்திய அவர், வீதியின் இருபுறங்களிலும் இடையூறு விளைவிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை உடனடியாக அகற்றி, அவற்றை பாதுகாப்பான இடங்களில் களஞ்சியப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
அதற்கு இணங்க, கடை உரிமையாளர் அந்த விடயங்களை புரிந்து கொண்டு, எதிர்வரும் புதன்கிழமைக்குள் அனைத்து பொருட்களையும் அப்புறப்படுத்தி, பிரதான வீதியின் இருபுறங்களையும் பாதுகாப்பான பகுதிகளாக மாற்றி அமைப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதன் போது வளத்தாப்பிட்டி-01 கிராம சேவக உத்தியோகத்தர் எம். உதயராஜன் அவர்களும் கலந்து கொண்டார்.