கீளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் “சகஸ்” நிகழ்ச்சி

கீளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் “சகஸ்” நிகழ்ச்சிக்கமைய, உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள முன்பள்ளி பாடசாலைகளை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் வியாழக்கிழமை (16.04.2026) முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பிஸ்மில்லாஹ் முன்பள்ளி பாடசாலையில் சிரமதானப் பணிகள், மரநடுகை மற்றும் பாடசாலை சுற்றாடல் அழகுபடுத்தும் நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ பதில் தவிசாளர் வீ.வினோகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அதேபோன்று, பாத்திமா முன்பள்ளி பாடசாலையில் நடைபெற்ற சிரமதானப் பணிகள், மரநடுகை மற்றும் பாடசாலை சுற்றாடல் அழகுபடுத்தும் நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும், M.P.C.S முன்பள்ளி பாடசாலையில் நடைபெற்ற சிரமதானப் பணிகள், மரநடுகை மற்றும் சுற்றாடல் அழகுபடுத்தும் நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி உதவியாளர் திருமதி யூ. எஸ்.எம்.சதாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபையின் நிதி உதவியாளர் எம். சத்தியநாதன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான ஏ.யோகானந்தன், எஸ்.சங்கீதன், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.