சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி வாகனப் பழுதுகள் ஏற்பட்டு, அதனால் மின்விளக்கு பழுதுகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,

அவற்றை குறைக்கும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களினால் நாவிதன்வெளி பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களிடம் விடுக்கப்பட்ட
வேண்டுகோளுக்கு இணங்க, நேற்று திங்கட்கிழமை நாவிதன்வெளி பிரதேச சபையின் மின்சாரப் பிரிவு ஊழியர்கள் வாகனத்துடன் சம்மாந்துறைக்கு அனுப்பப்பட்டு, பல பகுதிகளில் மின்விளக்கு திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பணிகளை சிறப்பாக நிறைவு செய்வதற்கு ஒத்துழைத்த நாவிதன்வெளி பிரதேச சபை மின்சாரப் பிரிவு ஊழியர்களுக்கும், செயலாளர் மற்றும் கெளரவ தவிசாளர் ஆகியோர்களுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.