புனித நோன்புப் பெருநாள் வாழ்த்து – சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர்
ஒரு மாத கால புனித ரமழான் நோன்பின் அர்ப்பணிப்பையும், ஈமானிய உணர்வையும் நிறைவு செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“இந்த இனிய நாளில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஓங்கி நிலைத்து, ஏழை எளியோருக்கு தானதருமங்கள் செய்து இறைவனின் அருளைப் பெற அனைவரும் முன்வர வேண்டும்.
நம் நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து ஓரளவு மீண்டு எழுந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக மீண்டும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, இந்நன்னாளில் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்.
இந்த புனிதமான நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் மக்களுக்கும், வெளிநாடுகளில் தொழில் புரியும் எமது சகோதரர்களுக்கும் எனது இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நோன்பு எமக்குக் கற்றுத் தந்த உயர்ந்த பண்புகளையும் போதனைகளையும் என்றும் நம் மனதில் நிலைநிறுத்தி, வாழ்நாள் முழுவதும் அவற்றின்படி நடக்க இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.”

0 Comments