மாகாண இப்தார் நிகழ்வு சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டிடத் தொகுதியில்
இனங்களுக்கிடையிலான சமாதானம், சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மாகாண இப்தார் நிகழ்வு சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டிடத் தொகுதியில் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், அம்பாரை மாவட்ட கலாச்சார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)






































0 Comments