போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தல் - முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு
அரசாங்கம் முன்னெடுத்து வரும் "முழு நாடுமே ஒன்றாக"தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் பங்குபற்றலுடன் பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று (04) இடம்பெற்றது.
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பது குறித்து தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜீ.பீ.எம். ரஸாட் அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், போதைப்பொருள் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டன.
.jpg)














0 Comments