கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கள நிலவரங்கள் ஆய்வு

கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கள நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் திட்ட பணிப்பாளர் மற்றும் திட்ட பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சம்மாந்துறைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இவ்விஜயத்தின் போது, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களும் குறித்த குழுவினருடன் இணைந்து நேரடி களப் பார்வையில் ஈடுபட்டார்.
இதன்போது, சிறிய பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கிராமிய அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், மக்கள் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றியும் விரிவாக பரிசீலிக்கப்பட்டது.
மேலும், திட்டங்கள் துரிதமாகவும் தரமான முறையிலும் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்தபா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.