கட்டாக்காலியாக அலைய விடப்பட்ட கால்நடைகளைக் கட்டுப்படுத்தல்

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பொதுப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விடப்பட்ட கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்படல் பெறுமதியான பயிர் வகைகளும் சேதமாக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.
கட்டாக்காலியாக அலைய விடப்பட்ட மாடுகளை அதன் சொந்தக்காரர்கள் வீடுகளில் அல்லது பண்ணைகளில் கட்டி வைத்து பராமரிக்கவும். இது அவர்களுக்கான இறுதி அறிவித்தலாகும்.
கட்டாக்காலியாக பிடிக்கப்படும் மாடுகளுக்கு பிரதேச சபையினால் ஒரு மாட்டுக்கு 10,000.00 ரூபா தண்டப்பணமும் ஒருநாள் பராமரிப்புச் செலவாக 2,000.00 ரூபாவும் அறவிடப்படும் மூன்று நாட்களுக்குள் தண்டப்பணத்தைச் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் இம்மாடுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அரச உடமையாக்கி ஏலத்தில் விற்கப்படும். மேலும் இந்நாட்களுக்குள் நோய்வாய்படும் மற்றும் இறக்கும் மாடுகளுக்கு பிரதேச சபை பொறுப்பேற்காது.
இம்மாடுகளின் சொந்தக்காரர்கள் இருப்பின் அவர்கள் தங்களின் மாடுதான் என்பதனை உறுதிப்படுத்துவதற்காக தங்களின் பகுதி கிராம சேவகரின் உறுதிப்படுத்தலுடன் மாட்டுத் துண்டு (பண்ணைக் காட்) மற்றும் ஆள் அடையாள அட்டை என்பவற்றை ஒப்படைக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் பிரதேச சபையினால் பிடிக்கப்படும் மாடுகள் (கால் நடைகள்) பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொலிசாரின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.