தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்

சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (17) பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமார், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் ரம்சின் காரியப்பர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நோன்பு காலத்தில் 06 ஆம் தரம் முதல் 10 ஆம் தரம் மாணவர்களுக்கு காலை 09.00 மணி தொடக்கம் 01.00 மணி வரை மட்டுமே கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
O/L, A/L மாணவர்களுக்கு காலை 09.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை மட்டுமே கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
நோன்பு கடைசிப்பத்து நாட்களில் எந்தவிதமான கல்விநடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது.
கல்வி நடவடிக்கைகளுக்காக வரும் சகல மாணவர்களும் பாடசாலைச் சீருடை அணிந்து வர வேண்டும்.
போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவதுடன், அவற்றை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வியாபார உத்தரவுப் பத்திரம் ரத்து செய்யப்படுவதோடு சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ள தீர்மாணிக்கப்பட்டது.