சனசமூக நிலையங்களின் உறுப்பினர்களுடனான வருடாந்த கலந்துரையாடல்

சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் இயங்கும் சனசமூக நிலையங்களின் உறுப்பினர்களுடனான வருடாந்த கலந்துரையாடல், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில், பிரதேச சபை கேட்போர் கூடத்தில் 2026.01.29 (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இக் கலந்துரையாடலின் போது, சனசமூக நிலையங்கள் மூலம் பிரதேச மக்களின் குறைபாடுகள், தேவைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், அனைத்து சனசமூக நிலையங்களும் உயிரோட்டமிக்கதாக செயல்பட்டு, மக்கள் நலனை மையமாகக் கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என கௌரவ தவிசாளர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ. பஸ்மிலா, பொறுப்பு உத்தியோகத்தர்கள், சனசமூக நிலையங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.