சேதமடைந்த மஜீட்புர பாடசாலை வீதி தற்காலிகமாக புணரமைப்பு
சம்மாந்துறை மஜீட்புர கிராம பாடசாலை வீதி, அண்மையில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்து, போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இவ்வீதியின் நிலைமை குறித்து பொதுமக்கள் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக களத்திற்குச் சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டார்.
தவிசாளரின் உத்தரவின் பேரில் கனரக வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, இவ்வீதி தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் இணைந்து பணிகளில் பங்கேற்றனர்.
இவ்பாடசாலை வீதி, 2016 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தவிசாளர் இருந்த காலப்பகுதியில், I-Road திட்டத்தின் கீழ் காபட் வீதியாக செப்பனிடுவதற்காக முன்மொழியப்பட்டது.






0 Comments