சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் சேவை பாராட்டி கௌரவிப்பு

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நீண்டகாலமாக பொறுப்பதிகாரியாக சிறப்பாக பணியாற்றிய கே.டி.எஸ்.ஜயலத் அவர்கள் இடமாற்றம் பெற்று இன்று செவ்வாய்க்கிழமை பிபில பொலிஸ் நிலையத்திற்கு செல்லவுள்ளார்.

இவரது சேவையை கௌரவிப்பதற்காக, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில், கௌரவ உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை, பிரதேச சபை பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சம்மாந்துறை மக்களின் பாதுகாப்பிற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் சேவைகள் நினைவுகூரப்பட்டதுடன், பொண்ணாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் வீ.வினோகாந், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட், கௌரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.