வர்த்தக நிலையங்களுக்கு கள விஜயம்

வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்" எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையும், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து முக்கிய நடவடிக்கைகள் மேற்கொண்டன.

இதற்கமைய, நூளம்புகள் பரவும் இடங்களாக இனங்காணப்பட்ட பிரதேசங்களில் புகைவிசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், வர்த்தக நிலையங்களுக்கு கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு, வர்த்தகர்களுக்கு சுகாதார அறிவுறுத்தல்களும், தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டன.