"வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்"
இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாட்டு தினம்
"வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்" எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, ஐந்தாவது நாளான இன்று வெள்ளிக்கிழமை இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாட்டு தினமாக சிறப்பிக்கப்பட்டது.
இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் அதிகதேவையுடைய பிரதேசங்களிலுள்ள மாணவர்கள், பொது மக்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் நோக்கில் நெய்னாகாடு மற்றும் மல்லிகைத்தீவு ஆகிய கிராமங்களில் நடமாடும் நூலக சேவை சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.வினோகாந்த், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், நெய்னாகாடு அல்- அக்ஸா வித்தியாலய அதிபர் ஏ.பி.ஹிபத்துல்லா, மல்லிகைத்தீவு அ.த.க பாடசாலை அதிபர் எஸ்.ஜதீஸ்வரா, நூலகர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது நெய்னாகாடு அல்- அக்ஸா வித்தியாலய வளாகம், மல்லிகைத்தீவு அ.த.க பாடசாலை ஆகியவற்றில் நடமாடும் நூலக சேவை, சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் பாடசாலை மாணவர்களுக்கிடையே கட்டுரை போட்டியும் இடம் பெற்றது.
0 Comments