உள்ளூராட்சி வாரம்
"வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்"
வருமான மேம்பாட்டு தினம்

"வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்" எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, நான்காவது நாள் வியாழக்கிழமை வருமான மேம்பாட்டு தினம் என சிறப்பிக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில், நீண்டகாலமாக நிலுவையாக இருந்த ஆதனவரி மற்றும் வியாபார அனுமதிப் பத்திர கட்டணங்கள் தொடர்பான அறவீடு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக, பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, வீடு வீடாக சென்று அறவீட்டனர்.

சம்மாந்துறை பிரதேச சபையின் உதவி தவிசாளர் வீ.வினோகாந்த், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களான ஏ.எல்.எம். ஜிப்ரி, எஸ்.எல்.எம்.பஹுமி, ஐ.எம்.ஹாதிக், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றன

















































ர்.