வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்த கலந்துரையாடல்
சம்மாந்துறை பிரதேசத்தில் யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்றமையினால் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில், அப்துல் மஜீட் மண்டபத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்போது சம்மாந்துறை பிரதேசத்தில் அதிகரித்து வரும் யானை தொல்லை, அவை கிராமப்புறங்களில் நுழைவதை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
நிகழ்வில், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நெளபர், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments