"வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்"
உள்ளூராட்சி வாரம் - 2025
பொதுப் பயன்பாட்டு தினம்
"வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்" எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, பொதுப் பயன்பாட்டு தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.
இதற்கமைய சம்மாந்துறை வீரமுனை சிறுவர் பூங்கா, இரவு நேரங்களில் இருளில் மூழ்கி காணப்படுவதை கவனத்தில் கொண்டு, பொதுமக்கள் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், சூரிய ஒளியால் இயங்கும் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அழகுபடுத்தும் வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
0 Comments