உள்ளூராட்சி வாரம் - 2025
"வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்"
இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாட்டு தினம்
"வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்" எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, ஐந்தாவது நாளான இன்று வெள்ளிக்கிழமை இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாட்டு தினமாக சிறப்பிக்கப்பட்டது.
இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிற்கும் நிகழ்ச்சிகள் பிஸ்மில்லாஹ் பாலர் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களான எம்.ஐ.எம்.றிஸ்விகான், ஏ.சீ.எம்.நயீம், ஹாதிக் இப்றாகீம்,தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஸாட், பெற்றேர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களினால் வாசிப்பை ஊக்குவிற்கும் வகையில் பேச்சுகள், உரையாடல்கள், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
0 Comments