பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

சம்மாந்துறை பிரதேச சபையினால் எதிர்வரும் 2025.09.15 ஆம் திகதி தொடக்கம் 2025.09.21 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளது.
இதில் முதலாவது நாளான 2025.09.15 ஆம் திகதி திங்கட்கிழமை பொது மக்களுக்கான நடமாடும் சேவை நடாத்தப்படவுள்ளது. இந்நடமாடும் சேவையில் சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொலிஸ் நிலையம் என்பன கலந்து கொண்டு உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகள் தொடர்பில் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவுள்ளன.
மேலும் 03வது நாளான 2025.09.17 ஆம் திகதி புதன் கிழமை ஆயுள்வேத வைத்திய முகாம், இலவச மூக்குக் கண்ணாடி பரிசோதனை, மற்றும் இலவச சீனி, இரத்த அழுத்த பரிசோதனை என்பன இடம் பெறவுள்ளது.

இடம் :- அப்துல் மஜீட் மண்டபம், சம்மாந்துறை
நேரம் -மு.ப. 09.00 மணி முதல் பி.ப. 01.00 மணி வரை

இந்நடமாடும் சேவையிலும், மருத்துவ பரிசோதனை நிகழ்விலும் பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
குறிப்பு :- 2025.09.17 ஆம் திகதி நடைபெறும் மருத்தவ பரிசோதனைக்கு வருகை தருபவர்கள் அன்றைய முதல் நாள் இரவு 10.00 மணிக்கு பின்னர் உணவு உண்பதை தவிர்த்து (Pasting) வருகை தரவும்.
#தகவல் மையம்
#சம்மாந்துறை பிரதேச சபை
📞
0672030800