சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அறிமுகம்

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களை, பிரதேச சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில் செவ்வாய்க்கிழமை சபையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது, அல்-அமீர் வித்தியாலயத்தின் தரம் 9 மாணவரான இளம் கண்டுபிடிப்பாளர் ஏ.எம். முஹம்மட் அப்ஹாமின், சமீபத்தில் மாவடிப்பள்ளியில் ஏற்பட்ட வெள்ளத்துடன் தொடர்புடைய முன்னெச்சரிக்கை சமிக்ஞை சாதனத்தை உருவாக்கியதையும், அதன் தொழில்நுட்ப செயல்முறையை இயக்கி காட்டியும் விளக்கினார்.