சம்மாந்துறை பிரதேச சபையின் 05ஆவது சபையின் இரண்டாவது அமர்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் .எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் சபா மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இவ்அமர்வில் ஆலையடிவட்டை பொது விளையாட்டு மைதானத்தின் பெயரை, மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானம் என மாற்றுவதற்கான தீர்மானம், அனைத்து கௌரவ உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.