கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளருடான கள விஜயம்

உள்ளுராட்சி மன்றங்களில் பல்வேறுபட்ட பணிகள் நீர்ப்பாசன திணைகளத்துடன் தொடர்புடையதாக இருப்பதனாலும் மக்களுக்கு வினைதிறனுடனான சேவையினை வழங்குவதற்காக சமகாலத்தில் நிலவும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் அவற்றை எதிர்காலத்தில் தீர்க்கும் பொறிமுறை தொடர்பான கள விஜயம் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஆர்.வேல்கஜன், பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக உதவி பொறியியலாளர் எம்.ஐ. இஸ்ஹாக், தொழில்நுட்ப உத்தியோகத்தர் வீ.யாக்கூப், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்தபா, எம்.வீ. எம்.ஜெசீர் உள்ளிட்ட பலர் கள விஜயத்தில் கலந்து கொண்டனர்.