சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய மாணவ பாராளுமன்ற பிரதிநிகள் சபை அமர்வை பார்வையிடுவதற்காக
சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய மாணவ பாராளுமன்ற பிரதிநிகள், பாடசாலையின் அதிபர் ஏ.எம்.றிஸ்வான், பிரதி அதிபர் எம்.எச்.ஜெஸீலா, ஆசிரியர்கள் சம்மாந்துறை பிரதேச சபையின் 05ஆவது சபையின் 07ஆவது கூட்ட அமர்வை பார்வையிடுவதற்காக, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் எம்.ஐ.எம்.றிஸ்விக்கான் அவர்களின் ஏற்பாட்டில் சபையின் அமர்வை பார்வையிட்டதுடன், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களை நேரில் சந்தித்து உரையாடினர். அதையடுத்து, அவர்கள் குழுப்புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.










0 Comments