டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்

"வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்" எனும் தொனிப்பொருளின் கீழ், நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வழிகாட்டலில் இன்று வியாழக்கிழமை (08) சம்மாந்துறையில் இடம்பெற்றன.

சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் பாடசாலை மற்றும் கல்வி நிலையங்களை அன்டிய பிரதேசத்தில் நுளம்பு பெருகும் இடங்கள் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர் ஹாதிக் இப்றாகீம், சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் திருமதி யூ.எஸ்.எம்.சதாத், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம்.எம்.எம்.முஸ்தபா, எம்.வி.எம்.ஜெசீர், பிரதேச செயலக சுற்றாடல் உத்தியோகர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கிராமசேவக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
இதன்போது முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் தொடக்கம் பெரிய பள்ளிவாசல் வரையான பிரதேசத்தில் சிரமதானம் இடம் பெற்றது.