கைத்தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில், சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கைத்தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில், பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் (23) இடம்பெற்றது.
நுண், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில், மதிப்பீடு சந்தைப்படுத்தல், நூகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள், சட்ட விதிகள், பாதுகாப்பு நடைமுறைகள், சேவைகள் வழங்கும் தரம், மற்றும் அரசாங்க கட்டுப்பாட்டு விலை தொடர்பான வழிகாட்டல்கள் உள்ளிட்ட முக்கியமான அம்சங்கள், விளக்கக்காட்சி மற்றும் உரைமூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
இதில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் அம்பாரை மாவட்ட பிரதி பணிப்பாளர் வீ.ஜே.ஆர்.வசந்த குமார, சம்மாந்துறை பிரதேச சபையின் உபதவிசாளர் வி.வினோகாந், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களான ஐ.எல்.எம்.சப்ரி, எம்.ஏ.எம்.முர்சித், நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரி முஹம்மட் ஸாஜீத் ஸமான், எம்.எச்.எம்.றிபாஜ், சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களான எஸ்.ஏ.எஸ்.இர்பானா, எஸ்.துசாந்தன் தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.






















0 Comments