சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள பாலர் பாடசாலைகளின் விடுகை விழாவும், பரிசளிப்பு நிகழ்வும்
சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள பாலர் பாடசாலைகளின் விடுகை விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் புதன்கிழமை (2025.12.17) நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களான ஏ.எல்.எம்.ஜிப்ரி, சீ.டினோஜன், ஏ.சீ.எம்.நயீம், வை.வீ.எம்.நபாஸ், ஹாதிக் இப்றாகீம், எஸ்.எல்.ஏ.நிஸார், அம்பாரை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலக சன சமூக உத்தியோகத்தர் ஐ.பஸ்மிலா, சம்மாந்துறை வலையக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் இசட்.எம்.றிஸ்வி, சம்மாந்துறை முன்பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஏ.வீ.சர்மிலா பானு, சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம். சுல்பா, பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.






































0 Comments