சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட். ஏ.எம். பைசல் அவர்களுக்கிடையிலான கலந்துரையாடல்

சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட். ஏ.எம். பைசல் அவர்களுக்கிடையிலான கலந்துரையாடல், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில், பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில், வியாழக்கிழமை (11.12.2025) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபையின் பதில் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.