கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்

சம்மாந்துறை பிரதேச சபையின் இவ்வருடத்தின் நான்காவது காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் புதன்கிழமை (03) பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது தேசிய கணக்காய்வு அலுவலக கணக்காய்வு அத்தியட்சகர் வை.வீ.நிசார், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் சார்பாக ஆய்வு உத்தியோகத்தர் எம்.எம்.எம்.றிஸ்வி, ஆகியோர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் முன்வைத்தனர்.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் பதில் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், பிரிவுகளின் பொறுப்பாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் உள்ளக கணக்காய்வுக் குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.