விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்கள் தொடர்பாக அறிவுறுத்தும் வேலைத்திட்டம்

கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி திணைக்களம், சம்மாந்துறை கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்கள் தொடர்பாக அறிவுறுத்தும் வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது.

இதன் போது விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்கள், அதன் தாக்கம், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள், செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்த விளக்கக்காட்சி மற்றும் உரைமூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை கால்நடை வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.சாஜீத், நிந்தவூர் கால்நடை வைத்திய அதிகாரி எம்.ஐ.றிப்கான், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், சம்மாந்துறை கால்நடை வைத்திய அதிகாரி அலுவலக கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் ஏ. டெனேஸ்வரன், இறைச்சி வியாபாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.