சுனாமி ஆழிப்பேரலையின் 21ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

சுனாமி ஆழிப்பேரலையின் 21ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது.

சுனாமி மற்றும் அண்மையில் ஏற்பட்ட திட்வா அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்காக விசேட துஆப் பிராத்தனையும், இரு நிமிடம் மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன்போது, சுனாமி பேரழிவின் தாக்கங்கள் மற்றும் சமீபத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களை நினைவுகூரும் பேருரை கௌரவ தவிசாளர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.