ஜனவரி 01 முதல் சம்மாந்துறை நகரின் பிரதான வீதியில் பாதையோர வியாபாரம் செய்ய தடை..
சம்மாத்துறை பிரதேச சபையின் வீதியோர மீன் வியாபாரிகளுடான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொலிஸ் அதிகாரி, சுகாதர பரிசோதகர், சுற்றாடல் உத்தியோகத்தர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர், மீன் வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில், சம்மாந்துறை நகரிலுள்ள அம்பாறை வீதி, பொலிஸ் வீதி, கல்முனை வீதி ஆகியவற்றின் இருபுறங்களிலுள்ள வீதியோர மீன் வியாபாரிகள் உட்பட மரக்கறி வியாபாரிகள், பழ வியாபாரிகள் சகல வீதியோர வியாபாரிகளும் ஜனவரி 01ஆம் திகதி முதல் ஹிஜ்ரா பொது சந்தையின் உட்பகுதியில் மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
















0 Comments