சம்மாந்துறை பிரதேச சபையில் கடமையாற்றும் வெளிக்கள ஊழியர்களுக்கு அலுவலக சீருடைகள் வழங்கும் நிகழ்வு
சம்மாந்துறை பிரதேச சபையில் கடமையாற்றும் வெளிக்கள ஊழியர்களுக்கு அலுவலக சீருடைகள் வழங்கும் நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில், பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஊழியர்களின் சேவையை மதித்து அவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கப்பட்டதுடன், ஊழியர்களுக்கு காப்புறுதி திட்டம், நலன்புரி அமைப்பு உள்ளிட்ட திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

















0 Comments