"செயிரி வாரம்"

கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)" தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக "செயிரி வாரம்" இன்று முதல் 4 நாட்களுக்கு பணிகள் நாடுபூராகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபையிலுள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் ஒருங்கிணைப்பில், சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பிரதேச சபையின் ஒவ்வொரு கிளைகளிலும் தேவையற்ற கோவைகள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.
அரச நிறுவனங்களில் அதிகாரிகள் தமது பணிகளை உரிய முறையில் சுதந்திரமாகவும், சுத்தமான சூழலிலும், சுகாதாரமான சூழலிலும் முன்னெடுப்பதற்கான நிலைமையை உருவாக்கிக் கொடுப்பதே திட்டத்தின் நோக்கமாகும்.